பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூன், 2016

ஜெயலலிதாவுக்காக மொட்டையிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய அதிமுக எம்.எல்.ஏக்கள்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜெயலலிதா ஆறாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து, தலைவாசல், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, அ.தி.மு.க., தொண்டர்கள் முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி ஆத்தூர் அருகே உள்ள அருகே பிரசித்தி பெற்ற வடசென்னிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்தது.

இதில், சேலம் மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் இளங்கோவன், ஆத்தூர் எம்.எல்.ஏ., சின்னதம்பி, கெங்கவல்லி எம்.எல்.ஏ., மருதமுத்து மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், முடி காணிக்கை செலுத்தி, மொட்டை அடித்து கொண்டனர். ஆத்தூர் எம்.எல்.ஏ சின்னத்தம்பி, கெங்கவல்லி எம்.எல்.ஏ. மருதமுத்து இருவரும் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.