பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2016

மலேசியா சென்றிருந்த மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்: சட்டசபை நிகழ்ச்சியில் நாளை பங்கேற்பு

மலேசியா சென்றிருந்த தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னை திரும்பினார். நாளை சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் மலேசியா சென்றிருந்தார். அவருடன் மனைவி துர்கா, மகன் உதயநிதி ஆகியோரும் சென்றிருந்தனர்.
சுமார் 5 நாட்கள் வெளிநாட்டில் தங்கி இருந்த மு.க.ஸ்டாலின் நேற்றிரவு 11.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
சட்டசபை கூட்டம் நாளை நடைபெற உள்ளதால் அதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படும் தனபாலை எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் மு.க.ஸ்டாலினும் அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வமும் அழைத்துச்சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைப்பார்கள். அதன்பிறகு சபாநாயகரை வாழ்த்தி பேசுவார்கள்.
சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின் முன்னதாக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் நிகழ்ச்சியிலும், அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். இரவில் ராயப்பேட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.