பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜூன், 2016

ஐ.நா திடலில் மீண்டும் அலையென அணி திரள்வோம் -பழ. நெடுமாறன் அழைப்பு

ஐ.நா மனிதவுரிமை பேரவையின் 32 வது அமர்வு நாளையதினம் ஆரம்பமாகி அடுத்த மாதம் 7ம் திகதி நிறைவடைய உள்ளது.

32 வது அமர்வில் ஐநா மனிதவுரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பாக இடைகால அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.
அந்தவைகையில் கடந்தவருடங்களில் இரு தடவைகள் ஐநா நோக்கிய எமது நீதிக்கான பயணங்களின் வரிசையில் இம்முறை ஆண்டின் நடுப்பகுதியிலும் காலத்தின் தேவை கருதி நாம் ஐநா நோக்கிய பயணத்தை முன்னெடுக்க கடமைப்பட்டுள்ளோம்.
எமது தொடர்ச்சியான வெகுசன போராட்டத்தின் விளைவாகவே தமிழின அழிப்புக்கான பொறுப்புக் கூரல் சர்வதேசமயமாக்கபட்டு உயிர்ப்போடு உள்ளது.
அந்தவகையில் இம்முறையும் எதிர்வரும் 20.06.2016 அன்று அனைத்துலக ரீதியாக புலம்பெயர் தமிழ் மக்கள் ஆகிய நாம் “எழுக தமிழரே” முழக்கத்துடன் ஐநா நோக்கி புறப்படுவோம். எமது மாவீரச் செல்வங்களின் ஈகத்தை எம் மனதில் நிறுத்தி, சிங்கள பேரினவாத அரசால் கோரமாக படுகொலை செய்யப்பட்ட எமது மக்களுக்கு பரிகார நீதியை வேண்டி, தமிழின அழிப்புக்கு பன்னாடு சுயாதீன விசாரணையை வலியுறுத்தி , தமிழீழ
தாகத்தோடு, ஒர்மத்தோடு பன்னாட்டு அரசியல் முற்சந்தியில் அலையென திரண்டிடுவோம்.
இந்தப் பேரணிக்கு தமிழகத்தில் இருந்தும் தமிழின உணர்வாளர் பழ.நெடுமாறன் ஐயா அவர்களும் அழைப்பு விடுத்துள்ளார்.