பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூன், 2016

முன்னாள் போராளி கிளிநொச்சியில் கைது

கிளிநொச்சி, பாரதிபுரத்தில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டிலேயே குறித்த முன்னாள் போராளி கைதுசெய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, பாரதிபுரத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் சசிகரன் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான இவர், நலன்புரி முகாமில் வைத்து பதிவை மேற்கொண்டபோது, தனது நிலைமையைக் கருத்தில்கொண்டு அவர் பஸ்ஸிலிருந்து இறக்கிவிடப்பட்ட நிலையில் மட்டக்களப்பில் மீள்குடியேற்றப்பட்டார்.
பின்னர் குறித்த முன்னாள் போராளி சமூக பொருளாதார சிறுவர் அபிவிருத்தித் தொண்டு நிறுவனத்தில் தலைவராகக் கடமையாற்றியபோது, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என அவரது மனைவி தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை கிளிநொச்சி, பாரதிபுரத்தில் வைத்து தனது கணவன் கைதுசெய்யப்பட்டுப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கொழும்புக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார் எனத் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவரது மனைவி மேலும் தெரிவித்தார்.