பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூன், 2016

மத்திய வங்கி ஆளுனரை காப்பாற்ற முயற்சிக்கிறார் ரணில்– ஜி.எல்.பீரிஸ்

ஊழல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூண் மகேந்திரனை விசாரணை மேற்கொள்ளும் போர்வையில் காப்பாற்ற முனைவதோடு, அவரை பதவியில் இருக்கச் செய்ய பிரதமர் காலம் தேடுவதாக முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
குறிப்பாக அர்ஜூண் மகேந்திரனின் வேலைகளை கண்காணிக்க ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை எந்த விதத்திலும் பொருத்தமானதல்ல என அவர் கூறினார்.
இதேவேளை, அரசாங்கம் பற்றி பேசுபவர்கள் கைது செய்யப்படுவதாகவும், நாடு மிகமோசமான நிலையை கடந்து விட்டதாகவும் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதன்போது தெரிவித்தார்