பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூன், 2016

அடுத்த தேர்தலில் தேமுதிக இருக்காது: வி.சி.சந்திரகுமார் பேட்டி

மக்கள் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், மக்கள் தேமுதிக, திமுகவுடன் இணைவது என முடிவு எடுக்கப்பட்டது. 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.சந்திரகுமார், தேமுதிகவை இல்லாமல் ஆக்குவது எங்கள் குறிக்கோள் கிடையாது. தேமுதிக நிர்வாகிகள் எங்களை தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். அதனை பார்க்கும்போது அடுத்த தேர்தலில் தேமுதிக இருக்காது. மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்தது என்பது எங்களோட குற்றச்சாட்டு அல்ல. ஜெயலலிதா மீண்டும் முதல் அமைச்சராகவதற்கு விஜயகாந்த் துணை போய்விட்டார் என்பதே எங்களது குற்றச்சாட்டு. மக்கள் விரும்பாத கூட்டணியை விஜயகாந்த் அமைத்ததால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 

விஜயகாந்த் கட்டுப்பாட்டில் தேமுதிக இல்லை. தேமுதிகவை விஜயகாந்த் அழித்து வருகிறார். விஜயகாந்தின் சுயரூபம் தெரிந்ததால் எங்களைப் போன்றவர்கள் விலகி விட்டோம். விஜயகாந்த் தனது சுயலாபத்துக்காக கட்சியையும் தொண்டர்களையும் அடகு வைத்தார். மக்கள் தேமுதிகவை திமுக உடன் இணைக்கும் விழா குறித்து திமுக தலைவர் கலைஞர், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பேசி முடிவு எடுக்கப்படும் என சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.