பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூன், 2016

இ.போ.ச.மீது உரும்பிராயில் தாக்குதல்.-சாரதிபடுகாயம்

காரைநகர் ஊடாக வவுனியாவிற்கான போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மீதான தாக்குதலில், பேரூந்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
காரைநகரிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பேரூந்து மீது, யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தியில் வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.15 இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், காயமடைந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். காயமடைந்தவர், வரணி கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய கதிர்காம குமார் குலசிங்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பேரூந்து மீது ஏற்கனவே சண்டிலிப்பாய் பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதன்போது எவரும் காயமடையவில்லை எனக் கூறப்படுகிறது. குறித்த தாக்குதல் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.