பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூன், 2016

சர்ச்சையை ஏற்படுத்திய நெய்மர் - செரீனா நீச்சல் உடை படம்


பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரரான நெய்மருடன், டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கடற்கரையில்
நீச்சல் உடையுடன் புகைப்படம் எடுத்த விவகாரம் தற்பொழுது இணைய தளங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அமெரிக்காவில் நடைபெறும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இருந்து பிரேசில் வெளியேறியுள்ளது. எனினும் லீக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்த போது, அவ்வணியின் நெய்மர் முதல் 11 வீரர்களில் களம் இறங்கவில்லை.
பார்சிலோனா கழக அணிக்காகவும் விளையாடி வரும் 24 வயதுடை நெய்மர் கடந்த வாரம் லொஸ் வேகாஸில் உள்ள கடற்கரை விடுதிக்கு சென்றிருந்தார். இதேவேளை, 34 வயதாகும் செரீனா வில்லியம்ஸும் தற்போது அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில், நெய்மர் சென்ற விடுதிக்கு செரீனாவும் சென்றுள்ளார். அதன்போது அவர்கள் இருவரும் நீச்சல் உடையில் ஒன்றாக நின்று புகைப்படத்திற்கு காட்சி கொடுத்துள்ளனர். அதன் பின்னர் குறித்த புகைப்படத்தை செரீனா வில்லியம்ஸ், தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுமுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களிலும், இணைய தளங்களிலும் வேகமாகப் பரவி வருகின்ற நிலையில், இது ஒரு சர்ச்சசையான விவகாரமாகவும் பலரால் பார்க்கப்படுகின்றது.