பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூன், 2016

வேலூரில் துவங்குவதாக இருந்த பேரணியில் மாற்றம் - எழும்பூரில் இருந்து துவக்கம்: அற்புதம்மாள் அறிவிப்பு


கடந்த 25 ஆண்டுகளாக சிறைச்சாலையில் வாடிவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி ‘7 தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம்’ சார்பில் நாளை (11-6-2016) வேலூர் சிறை அருகில் தொடங்கி சென்னை கோட்டை நோக்கி நடைபெறுவதாக இருந்த வாகனப் பேரணியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நாளை வேலூரில் இருந்து நடைபெறுவதாக இருந்த பேரணி சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து பேரணி தொடங்கும் என்றும்,  கோட்டையில் முதலமைச்சரிடம் மனு அளிக்கப்படும் என்றும் சென்னையில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்