பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூன், 2016

சுவிஸ் ஆட்சி முறை இலங்கையிலும் கொண்டுவரப்பட வேண்டும்!- வடக்கு முதல்வர்

சுவிட்ஸலாந்து நாட்டின் ஆட்சி முறை போலவே இலங்கையிலும் ஆட்சி முறைஅமைக்கப்பட வேண்டும் என வட மாகாண
முதல்வர் சீ;வீ.விக்னேஸ்வரன்தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த நாட்டில பெரும்பான்மையினரைப் போலவே சிறுபான்மையினருக்கும்அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அவ்வாறான ஆட்சி முறையேஇங்கும் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சுவிட்ஸலாந்து மக்கள் தமது விருப்பத்தின் படி வாழ்வதற்கான சூழ்நிலைஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுவிட்ஸலாந்தின் உயர்ஸ்தானிகர் ஹென்ஸ் வோக்கருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறுகுறிப்பிட்டுள்ளார்