பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூன், 2016

ஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத்தில் ஸ்காபரோ – றூச் றிவர் தொகுதியில் வேட்பளராக லிபரல் கட்சி சார்பாக பிரகல் திரு தெரிவு

ஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத்தில் ஸ்காபரோ – றூச் றிவர் தொகுதியில்  ஒரு இடைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில் லிபரல் கட்சி சார்பாக போட்டியில்  விண்ணப்பிக்க பி ரகல் திரு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.pirakal
அதற்கு முன்னோடியாக லிபரல் கட்சி வேட்பாளர்களைத் தெரிந்தெடுப்பதற்கு நியமனத் தேர்தல் இன்று யூன் 5 நடைபெற்றது. கட்சி உறுப்பினர்கள் வாக்களித்து வேட்பாளரைத் தெரிவு செய்தனர். மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 1600 இதில் 1075 வாக்குகளை பெற்று முதல் இடத்தில் தெரிவு செய்யப்பட்டார்.
லிபரல் கட்சியிடம் நியமனம் கேட்டு 6 பேர் போட்டியிட்டனர். இதில் பிரகல் திரு மற்றவர் முன்னாள் புதிய சனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராதிக சிற்சபேசன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்போது கட்சி மாறி லிபரல் கட்சியில் கேட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.