பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜூன், 2016

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ராஜினாமா

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியின் காரணமாகவே அவர் பதவி விலகியுள்ளதாக தெரிகிறது.

மேலும் பதவி விலகல் கடிதத்தை கடந்த 15ம் திகதியன்றே ராகுல் காந்தியிடம் அளித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இளங்கோவனின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, செல்வகுமார் மற்றும் திருநாவுக்கரசர் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்களிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.