பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜூன், 2016

சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை

ஆழ்வார்பேட்டையில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கைப்பற்றப்பட்ட வீட்டில் இன்று காலை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பூட்டியிருந்த மேலும் 2 அறைகளை நீதிமன்ற அனுமதியுடன் திறந்து ஆய்வு மேற்கொண்டனர். தமிழக காவல்துறையின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொதன்மாணிக்கவேல் தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது. 

சென்னை ஆழ்வார்பேட்டை முர்ரேஸ்கேட் சாலையில் வசிக்கும் தொழில் அதிபர் தீனதயாளனின் பங்களா வீட்டில் ரூ.50 கோடி மதிப்புள்ள 55 பழங்கால கற்சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை மீட்டனர்.

அந்த மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் 600 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான சிலைகள் என்று தெரியவந்துள்ளது. அந்த சிலைகளில் ஏராளமான சாமி சிலைகள் இருந்தன. அவற்றை கோவில்களில் திருடி வெளிநாட்டிற்கு கடத்தி செல்வதற்கு திட்டமிட்டு தீனதயாளன் தனது வீட்டில் பதுக்கி வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். சிலைகளை மீட்டபோது தொழில் அதிபர் தீனதயாளன் வீட்டில் இல்லை.