பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூன், 2016

இலங்கையில்,வெளிநாட்டவர்கள் காணிகளை கொள்வனவு செய்யலாம்.

வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவுள்ளதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அரசாங்கம், விரைவில் காணித் திருத்தச்சட்டத்தினை கொண்டுவரவுள்ள நிலையில், இந்த சட்டத்திற்கு அமைய எதிர்வரும் மூன்று, நான்கு வாரங்களில் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய நிலையில், வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் காணிகளைக் கொள்வனவு செய்வதை தடுக்கும் வகையிலான சட்டம் அமுலில் உள்ளது.
எனினும் புதிய காணித் திருத்தச்சட்டத்தின் ஊடாக, எதிர்வரும் காலங்களில் வெளிநாட்டுப் பிரஜைகள் வர்த்தக நோக்கங்களுக்காக காணிகளை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 300,000 அமெரிக்க டொலர்களை கொண்டு வரும் எந்தவொரு வெளிநாட்டுப் பிரஜைக்கும், பத்தாண்டுகால தற்காலிக வீசா அனுமதியை வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது