பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜூன், 2016

சுவாதி கொலை வழக்கில் கொலையாளியின் உருவப்படம் வெளியீடு



சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை ஐ.டி. ஊழியர் சுவாதி, மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். எப்போதும் நடமாட்டம் உள்ள ரயில் நிலையத்தில் கொலை நடந்தபோதும், கொலையாளி குறித்த எந்த தடயமும் கிடைக்காமல் இருந்தது. அந்த ரயில் நிலையத்தின் அருகே உள்ள வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியிடப்பட்டது. அதில் இளைஞர் ஒருவர் ஓடுவது போல் இருந்தது. இருப்பினும் அவரை அடையாளம் காண முடியாத அளவுக்கு காட்சிகள் தெளிவாக இல்லை என்பதால் கொலையாளியை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்தது.

இந்த நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறிய தகவலைக் கொண்டு, கணினி மூலம் குற்றவாளியின் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும். இந்த வழக்கில் இரண்டு பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.