பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூன், 2016

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்ததில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இன்றும் கட்சி நிர்வாகிகள் சிலரை அழைத்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். 

ஆலோசனைகளுக்கு பிறகு கட்சி நிர்வாகிகள் சிலர் செய்தியாளர்களிடம் பேசும்போது, வரும் உள்ளாட்சித் தேர்தலை தேமுதிக தனித்து சந்திக்கிறது. மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததால்தான் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்தோம் என்று கேப்டனிடம் எடுத்துக் கூறினோம். உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி என்றாலே மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என்றுதான் அர்த்தம் என்றனர். 

ஆனால், தேமுதிகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இருந்து விலகுவதாக எந்த தகவலும் வெளியாக வில்லை. 

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார். 

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தேமுதிக மற்றும் த.மா.கா. ஆகிய கட்சிகள் கடைசி நேரத்தில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.