பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூன், 2016

அதிமுக நிர்வாகிகள் நியமனம் : நத்தம் விசுவநாதனுக்கு மீண்டும் கட்சிப் பதவி


அதிமுக செய்தித் தொடர்பாளராக நத்தம் விஸ்வநாதனை நியமித்து ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார்.   நத்தன் விஸ்வநாதனுக்கு கூடுதலாக அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பையும் வழங்கியுள்ளார்.

மேலும், அமைப்புச்செயலாளரக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

நடைபற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், திமுகவின் பெரியசாமியிடம் தோல்வியடைந்தார்.  அவர் ஏற்கெனவே போட்டியிட்ட நத்தம் தொகுதியிலும் அதிமுக தோல்வியடைந்தது.

இதையடுத்து நடைபெற்ற நிர்வாகிகள் மாற்றத்தின் போது நத்தம் விசுவநாதனிடமிருந்த திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நத்தம் விசுவநாதனுக்கு மீண்டும் கட்சிப் பதவி வழங்கப்பட்டுள்ளது.