பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூன், 2016

யாழ் மாவட்டத்தில் மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர்கள் பங்குபெறும் GPL கிரிக்கெட் போட்டிகள்

மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர்களும், மஹாஜனாக் கல்லூரியின் கிரிக்கெட் பயிற்றுனர்களுமான ரொகான்
ராஜசிங்கம் மற்றும் சங்கர் ஆகியோரின் ஞாபகார்த்தமாக GPL - Grasshoppers Premiere League கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடை பெறவுள்ளது.
யாழ் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களிலிருந்து 42 விளையாட்டு வீரர்களை கொண்டு 6 அணிகளாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த GPL சுற்றுப்போட்டிக்காக உருவாகியிருக்கும் 6 அணிகளுக்கும், 6 பிரதான வர்த்தக நிறுவனங்கள் ஆதரவு வழங்குகின்றார்கள்.
6 திறமையான கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களும் 6 சிறப்பான மேலாளர்களும் யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 22 May மாதம் Tilko Jaffna City Hotelஇல் விளையாட்டு வீரர்களுக்கான ஏலமும், இந்த GPL சுற்றுப் போட்டிக்கான அறிமுக விழாவும் நடை பெற்றது.
எதிர்வரும் 26 June மகாஜனா கல்லூரியில் நடை பெறவுள்ளது காலை 8 மணியிலிருந்து நடைபெறவுள்ளது