பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜூலை, 2016

ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியமும் தமிழ்ச்சோலையும் இணைந்து நடாத்திய 11ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி

ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியமும் தமிழ்ச்சோலையும் இணைந்து நடாத்திய 11ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி கடந்த 25.06.2016அ
ன்று சனிக்கிழமை காலை 10மணியளவில் ஸ்ராஸ்பூர்க் நகரில் உள்ள ROTONDE விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இந்த விளையாட்டுப்போட்டிக்கு கௌரவ விருந்தினர்களான ஸ்ரார்ஸ்பூர்க் மாநகர உதவி நகரபிதா, ஸ்ரார்ஸ்பூர்க் ஐரோப்பிய அபிவிருத்திக் குழு உப தலைவி , ஸ்ராஸ்பூர்க் சமூக ஆர்வலரும், தொழிலதிபருமான திரு. சாந்தன் அவர்களும் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியை மங்கள விளக்கேற்றி, ஒலிம்பிக் சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையுடன் விளையாட்டுப்போட்டி ஆரம்பமாகியிருந்தது. ஓட்டம், தடைஓட்டம், தேசிக்காய் ஓட்டம், பழம் பொறுக்கல், தவளைப் பாய்ச்சல், கிளித்தட்டு, சங்கீதக் கதிரை போன்ற விளையாட்டுக்கள் அவரவர் வயதெல்லைக்கு ஏற்ப நடைபெற்றிருந்தது. மழலைகள் பிரிவில் இருந்து முதியவர் வரை விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டிருந்தர்.
போட்டியிலே கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இறுதியில் நம்புங்கள் தமிழீழம் பாடலுடன், பி.பகல் 5 மணியளவில் இவ் விளையாட்டுப் போட்டி இனிதே நிறைவுக்கு வந்தது.
    
   
   Bookmark and Share Seithy.com