பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூலை, 2016

பட்டுக்கோட்டை திமுக பிரமுகர் மனோகரனை வெட்டி கொலை செய்த 13 பேர் போலீசில் சிக்கினர்



                   தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று முன்தினம் மாலை தி.மு.க பிரமுகர் தங்க.மனோகரன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் பட்டுக்கோட்டை முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. முக்கிய குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் காவல் நிலையம் முன்பு சிறப்பு உதவி ஆய்வாளர் அசோகன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது வேகமாக சந்தேகத்திற்கு இடமாக சென்ற கார் ஒன்றை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அதில் மணி, லோகேஷ் உட்பட 13 பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் பட்டுக்கோட்டை தி.மு.க பிரமுகர் தங்க.மனோகரனை கொலை செய்தவர்கள் என்று தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து அறிவாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் பட்டுக்கோட்டை போலீசாருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைத்து அவர்களிடம் எடையூர் போலீசார் 13 பேரையும் ஒப்படைத்தனர். இச்சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.