பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூலை, 2016

கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலி: 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

த்திரபிரதேச தலைநகர் லக்னோ அருகே கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்தனர். மல்லிகாபாத், உனானோ கிராமங்களைச் சேர்ந்த மேலும் 40 பேருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்த 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உ.பி.யில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மல்லிகாபாத் ஆய்வாளர், மதுவிலக்குப்பிரிவு போலீஸ் உள்பட 8 பேரை சஸ்பென்ட் செய்து அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.