பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூலை, 2016

சுமார் 346 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

அத்தியாவசிய பொருட்களை  கட்டுப்பாட்டு விலையில் விற்கத் தவறிய 346 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நூகர்வோர் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சந்தேகத்துக்கு இடமான சுமார் 650 விற்பனை நிலையங்களை கடந்த 4 நாட்களாக சேதனையிட்டதாக அந்த சபையின் பிரதிப் பணிப்பாளர் சமந்தா கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இதனைத் தவிர, இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் நுகர்வோர் சட்டத்தை மீறிய 10,162 விற்பனை நிலையங்கள் சிக்கியதாக  கூறிய அவர் இவ்வாறான வர்த்தக நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்கள் ஊடாக 4 கோடி 57 இலட்சம் ரூபாய்க்கும் அதிக தொகை கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.