பக்கங்கள்

பக்கங்கள்

1 ஜூலை, 2016

பசில் ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

 பசில் ராஜபக்ஷ இன்று (01) பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.

அரச சொத்துக்களை தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியமை, கம நெகும திட்டத்தின் நிதியை மோசடி செய்தமை, உள்நாட்டு பயணங்களின் விமானச் சேவைக்காக 150 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை கடந்த ஜுன் 17 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பசில் ராஷபக்ஷ ஆஜராகியிருந்த நிலையில், அவர் மீண்டும் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.