பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2016

இ.போ.ச கட்டணமும் அதிகரிப்பு

புதிய பேரூந்து கட்டண அதிகரிப்பிற்கு அமைய இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களின் கட்டணமும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் ஆறு சதவீதத்தால் அதிரிக்கப்படும் என, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். 

இதற்கமைய ஆகக் குறைந்த பஸ் கட்டணம், 9 ரூபாயாகக் காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

இதேவேளை அரச போக்குவரத்துச் சேவைக்கு சொந்தமாக தற்போதுள்ள 104 டிப்போக்களை 50 ஆக குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரச போக்குவரத்துச் சபையை தனியார் மயப்படுத்தப் போவதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லையெனவும் பிரதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.