பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூலை, 2016

எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பு கூறியுள்ளது. 

தமது கோரிக்கைகளுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ அல்லது உயர் கல்வி அமைச்சோ சரியான தீர்வு வழங்காமையின் காரணமாக இவ்வாறு அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அவர்கள் கூறியுள்ளனர். 

இதற்கிடையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகரவை விடுதலை செய்யுமாறு மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது