பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜூலை, 2016

கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் தவறில்லை! - மக்ஸ்வல் பரணகம

010ம் ஆண்டுக்கு முன்னதாக படையினர் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் அது சட்டவிரோதமானதல்ல என காணாமல் போனவர்கள்
தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். 2010ம் ஆண்டுக்கு முன்னதாக கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தும் பிரகடனம் அமுலில் இருக்கவில்லை. 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே இந்த பிரகடனம் அமுல்படுத்தப்பட்டது. எனவே இராணுவ தேவைகளுக்காக படையினர் 2010ம் ஆண்டுக்கு முன்னதாக கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் அதில் எவ்வித பிழையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தியமை குறித்து பிராச்சாரம் செய்யப்பட்டது. எனினும் ஆணைக்குழு நடத்திய விசாரணைகளின் போது இவ்வாறான ஆயுதங்கள் பயன்படுத்தியமைக்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை. பிரகடனம் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதில் பிழை எதுவும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.