பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூலை, 2016

ராம்குமாருக்கும் சுவாதி கொலைக்கும் சம்பந்தமே இல்லை : ஓய்வு பெற்ற நீதிபதி ராமராஜ் பேட்டி

ஓய்வு பெற்ற நீதிபதியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ராமராஜூம் அவரது அமைப்பில் உள்ளவர்களும் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமாரை பார்த்துவிட்டு அவரது கிராமமான மீனாட்சிபுரத்தில் அவரது குடும்பத்தாரிடம் விசாரிப்பதற்காக வந்தார்.   

ராம்குமார் குடும்பத்தினரை சந்தித்த அவரிடம் நாம் பேசியபோது,  ‘’ராம்குமாரின் காயம் ஆறாத நிலையில் அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.  அவரால் பேசமுடியவில்லை.  மன அழுத்தத்தில் இருக்கிறார்.  அவரது தந்தை பரமசிவம் எங்களிடம் இந்த வழக்கில் உதவி செய்யும்படி எங்களை அணுகினார்.  அதன் அடிப்படையில் நான் புழல் சிறையில் உள்ள ராம்குமாரை சந்தித்தேன்.  மேற்கொண்டு அவரது தாயாரிடம் விசாரிப்பதற்காக வந்தேன்.  அவரிடம் சில விசயங்களை கேட்டு தெரிந்துகொண்டேன்.  

ராம்குமாரின் காயம் ஆழமானது.  அதை விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.  அப்போதுதான் அது அவரால் எற்படுத்தப்பட்டதா?  அல்லது வேறு யாராவது ஏற்படுத்தியதா என்கிற உண்மை தெரியவரும்.   மேலும்,  இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும்.  ராம்குமாருக்கும் இந்த கொலைக்கும் சமபந்தமே இல்லை; அதை எங்களால் நிரூபிக்க முடியும்’’ என்றார் அழுத்தமாக.ம்குமாருக்கும் சுவாதி கொலைக்கும் சம்பந்தமே இல்லை :
  ஓய்வு பெற்ற நீதிபதி ராமராஜ் பேட்டி