பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூலை, 2016

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் நீதிமன்றில் ஆஜர்


யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ரி. சிசிதரன் யாழ்ப்பாணம் நீதவான் நீதமன்றத்தில் இன்று புதன்கிழமை  ஆஜர்படுத்தப்பட்டார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், வணிக முகாமைத்துவபீட பீடாதிபதி ரி. வேல்நம்பி மற்றும் விரிவுரையாளர்கள் ஊடாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.

நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு கோப்பாய் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட  மாணவர் ஒன்றியத் தலைவர் ரி. சிசிதரன் விசாரணைகள் முடிந்த பின்னர் பிணையில் விடுவிகப்பட்டார்.

மேற்படி சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும், மாணவன் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில்தான் இவர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.