பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜூலை, 2016

உலகின் அதிவேக ரயிலின் பரீட்சாத்த செலுத்தல் இன்று! சீன ஆய்வாளர்கள் சாதனை

உலகிலேயே அதிவேக ரயிலிற்கான முன்னோட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை சீனாவில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 420 கிலோமீற்ற
ர் வேகத்தில் பயணிக்கக் கூடிய புதிய ரயில், சீன ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளபடும் புதிய சாதனையாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வர்ணிக்கின்றன.
இந்த கடுகதி ரயிலானது மணிக்கு 420 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடியது என்றும், சீனாவின் மத்திய மாகாணத்தின் ஜங்ஜாவ் நகரை ஒரு மணிநேரத்தில் கடக்கும் சக்தி கொண்டது என்றும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, இதேவகையான இரண்டு அதிவேக ரயில்கள் ஒன்றை ஒன்று கடந்துசெல்லும் போது இரண்டினதும் கடந்துசெல்லும் வேகம் மணிக்கு 840 கிலோமீற்றராக அமையும் என்றும் இது விமானம் ஒன்றின் வேகத்திற்கு நிகரானது என்றும் ஆயவாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த பரீட்சாத்த நடவடிக்கையினால் பெற்றப்பட்ட முடிவுகள் இதுவரை இறுதி செய்யப்படவில்லை என்றும், அவை ஆய்வாளர்களால் கணிப்பிடப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் சிறந்த முயற்சியான இது எதிர்கால ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு முழுமையான முதல்தர தகவல் மூலமாக அமையும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.