பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூலை, 2016

யாழ் இளைஞன் நீர்கொழும்பில் கைது

போலி கடவுச்சீட்டில் துருக்கி ஊடாக இத்தாலி செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்  குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால்  இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.   

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள தரகர் ஒருவர் மூலமே குறித்த போலி ஆவணங்களை தயாரித்து குறித்த இளைஞன் இத்தாலி செல்ல முற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த இளைஞன் டீ.கே.731 என்ற துருக்கி விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்திலேயே பயணிக்கவிருந்ததாகவும், இவரது ஆவணங்களில் சந்தேகம் கொண்ட விமான நிலைய அதிகாரிகளின் தீவிர விசாரணையை அடுத்து இவரை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள குறித்த தரகர் இரண்டு வாரங்களுக்குள் குறித்த போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்துள்ளதோடு, இத்தாலி சென்ற பின்பு அங்கு வசிக்கும் நபர் ஒருவருக்கு 3இலட்சம் ரூபா பணத்தினை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரை இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக விமான நிலைய குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.