பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூலை, 2016

வனப்பேச்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் ஓ.பி.எஸ்.

தமிழ்நாடு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்று வணங்கினார்.   இன்று காலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள  செண்பக தோப்பில் உள்ள தனது குலதெய்வமான  வனப்பேச்சி அம்மன் கோவில் கும்பாபிகேஷகத்தில் பங்கேற்றார்.

மிகவும் சோர்வுடன் காணப்பட்ட ஓ.பி.எஸ். கோபுர கலசத்திற்கு செல்ல அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டில் ஏற முடியாமல் தயங்கி தயங்கி ஏறிச்சென்றார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, நகர சேர்மன் மட்டுமே இந்த கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்தனர்.  மற்றபடி கட்சியினர் எவரும் ஓ.பன்னீசெல்வத்துடன் வரவில்லை.