பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூலை, 2016

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கூட்டமைப்பு வேண்டுகோள்

நீண்ட காலமாக விசாரணைகள் எதுவும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் மிக விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்று சந்தித்த அவர்,  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார். 

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளுக்காக பிரத்தியேக நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது, இந் நீதிமன்றத்தின் ஊடாக இதுவரை ஒருவர்கூட விடுவிக்கப்படவில்லை.
எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், வெடிபொருள் மீட்பு குற்றச்சாட்டில் சில கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சாட்சியாளர்களிடம் வெடிபொருட்களை சமர்பிக்குமாறு உத்தரவிட்டு குறித்த வழக்குகளை காலம் தாழ்த்தி வருகின்றனர்.

எனினும், சாட்சிக்கு வருபவர் அவற்றை சமர்பிக்க முடியாத நிலையில் இருக்கின்றனர். அத்துடன், சாட்சிக்கு வருபவர் உரிய முறையில் சாட்சியளிக்க முடியாதநிலையில், அவருக்கான அவகாசம் கூட வழங்கப்படுவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்