பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூலை, 2016

ரணில் விக்கிரமசிங்க குருவாயூர் மலைக்கோயிலுக்கு விஜயம்

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் கேரளா, குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மலைக்கோயிலுக்கு
விஜயம் செய்வார் என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் தலாரி ரவி, இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கடந்த சனிக்கிழமையன்று திருப்பதி தேவஸ்தான தலைவர் சாடலவாடா கிருஸ்ணமூர்த்தி, இலங்கையின் பிரதமருக்கு லட்டு பிரசாதத்தை வழங்கியபோதே ரணில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே 2002ஆம் ஆண்டு இந்த மலைக்கோயிலுக்கு ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது