பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூலை, 2016

நாசர்,விஷாலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

திரைப்பட கலைஞர்கள் ஒருங்கிணைப்பாளர் தங்கையா நடிகர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து அவர், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கையாவின் புகாருக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் ஆகியோர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார். 

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, பெப்சி தலைவர் சிவா ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.