பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூலை, 2016

பொருளாதார மத்தியநிலையம் தாண்டிக்குளத்தில் வேண்டாம்

வவுனியா தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைத்து, விவசாய கல்லூரிக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டமென வலியுறுத்தி, வவுனியா விவசாய கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா விவசாய கல்லூரிக்கு முன்பாக, இன்று முற்பகல் ஒன்றுகூடிய விவசாயக் கல்லூரி மாணவர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்

இதன்போது, ‘எம் தலைமைகளே எமது கல்லூரியை பாதுகாத்துத் தாருங்கள்’, ‘கற்பதற்கான தகுந்த சூழல் வேண்டும்’, ‘வயல்களின் முடக்கம் வறுமையின் தொடக்கம்’, ‘பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்திற்கு பொருத்தமற்றது’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

தமது கோரிக்கை தொடர்பில் உரிய தலைமைகள் சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டுமென வலியுறுத்திய விவசாய கல்லூரி மாணவர்கள், வட மாகாணத்தில் உள்ள ஒரேயொரு விவசாய கல்லூரியையும் இல்லாமல் செய்துவிட வேண்டாமென வலியுறுத்தினர்.