பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூலை, 2016

கபாலிக்கு எதிராக மீண்டும் வழக்கு: ரஜினி, தாணுவுக்கு நோட்டீஸ்

லிங்கா படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யாமல் கபாலி படத்தை வெளியிடக் கூடாது, தடை செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் நாளைக்குள் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

கோவையை சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் மகாபிரவு என்பவர், ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படத்தால் தனக்கு 89 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. இதனை வழங்க தயாரிப்பாளர் தரப்பு ஒப்புக்கொண்டது. ஆனால் ஒப்புக்கொண்டப்படி லிங்கா தயாரிப்புக் குழு பணத்தை கொடுக்க மறுத்துவிட்டது. இதனால் தனக்கு தர வேண்டிய நஷ்ட தொகை வரும்வரை, ரஜினி நடத்த கபாலி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட 7 பேர் நாளைக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.