பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூலை, 2016

திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்: எச்.ராஜா

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

’’தபால் நிலையங்களில் கங்கை நீர் விநியோகிக்கப்படுவது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் கிண்டலடித்துள்ளார். இந்து மத நம்பிக்கைகளை தொடர்ந்து கிண்டலடிக்கும் அவர், மற்ற மதத்தினரின் செயல்பாட்டை பற்றி வாய் திறப்பதில்லை.

மசூதிக்கு, தமிழக அரசு அரிசி வழங்குவது குறித்து கலைஞரால் விமர்சிக்க முடியுமா? தபால் நிலையங்களில் கடிதம் அனுப்புவது குறைந்து விட்டது. இதனால் தபால் நிலைய பணியாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கும் வகையில் சில திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் இதை கருத்தில் கொள்ளாமல் கலைஞர் விமர்சிப்பது சரியல்ல.

தொடர்ந்து அவர் இந்து மதத்தை விமர்சிப்பதால் அவரது கட்சியில் உள்ள இந்து உணர்வாளர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும். என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவதூறு பரப்பி பேசியுள்ளார்.  இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும்’’என்று கூறினார்.