பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூலை, 2016

இலங்கை தொடர்பான அறிக்கைக்கு உலகத் தமிழர் பேரவை வரவேற்பு

அண்மையில் நடந்து முடிந்த ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையகத்தின் அமர்வுகளில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வாய்மொழி மூலமான அறிக்கையை தாம் வரவேற்பதாக, லண்டனைக் களமாகக் கொண்டு இயங்கும் உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. 

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் குசைனால் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்தும் தமது செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசிற்கு உலகத் தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை தொடர்பான அறிக்கைக்கு உலகத் தமிழர் பேரவை வரவேற்பு