பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூலை, 2016

யூரோ கால்பந்து: வேல்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது போர்ச்சுகல்

பிரான்சில் நடந்து வரும் 15–வது ஐரோப்பிய கால்பந்து திருவிழா (யூரோ) இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில், லயன் நகரில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி, ஆஸ்லே வில்லியம்ஸ் தலைமையிலான வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. 

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில்,  வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுகல் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு போர்ச்சுகல் அணி ஐரோப்பிய கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. . இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதியில் உலக சாம்பியன் ஜெர்மன், தொடரை நடத்தும் பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.