பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூலை, 2016

திமுக பிரமுகர் மனோகரன் பதவி பறிப்பு விரோதத்தால் கொலை செய்யப்பட்டாரா?




    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த மனோகரன் மதிமுக வில் நீண்ட காலம் கவுன்சிலராக இருந்தார்.

   இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு பிறகு திமுக வில் இணைந்தார். இணைந்த சில மாதங்களில் பட்டுக்கோட்டை நகர திமுக பொருப்பாளராக நியமிக்கப்பட்டார். அதனால் மாஜி ந.செ. சீனி இளங்கோ தரப்பினருக்கும் மனோகரன் தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.

   இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை  மனோகரன் தனது தோட்டத்திற்கு சென்று திரும்பிய போது கோட்டைக்குளம் அருகே நின்ற 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மனோகரனை வழிமறித்து கழுத்து, தலை பகுதிகளில் பலமாக வெட்டியதுடன் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்த மனோகரன் முகத்தில் கல்லை வைத்து நசுக்கிவ்விட்டு சென்றுள்ளனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மனோகரனை மீட்ட பொதுமக்கள் தஞ்சையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது மனோகரன்  இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

   இந்த சம்பவத்தால் தஞ்சை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது