பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூலை, 2016

வெளிநாட்டு நீதவான்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்ய பிரதமர் முயற்சிக்கின்றார் – ஜீ.எல்.பீரிஸ்

வெளிநாட்டு நீதவான்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்ய பிரதமர் முயற்சிப்பதாக முன்னாள் வெளிவிவகார
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
படையினருக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படக் கூடிய வழியினை பிரதமர் ஏற்படுத்த முயற்சிக்கின்றார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றின் தீர்ப்பினை மீறிச் செயற்படுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபாநாயகரை கோரியமை, அரசியல் சாசனத்திற்கும் நீதிமன்றின் சுயாதீனத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட சிங்கராசா வழக்கு தொடர்பிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அரசியல் சாசனத்திற்கு முரணான வகையில் செயற்பட்டு நாட்டிற்குள் சர்வதேச நீதவான்களை விசாரணைக்கு அழைக்கும் வழியொன்றையே பிரதமர் ஏற்படுத்த முயற்சிக்கின்றார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.