பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூலை, 2016

அதிர்ச்சிச்செய்தி .பள்ளிவாசலில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் ஆஸாத் நகர் முஸ்லிம் பள்ளிவாயலில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
.
மீரா தைக்காப் எனும் பள்ளிவாசலில் இந்த சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் கே.எம்.நாஸ்கீன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு ஒன்றின் காரணமாக மூன்று பேர் கொண்ட குழுவினரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்