பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூலை, 2016

கோப் குழுவின் விசாரணை வளையத்திற்குள் அரச நிறுவனங்கள்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், தேசிய ஒளிபரப்பு கூட்டுத்தாபனம், தேசிய லொத்தர் சபை மற்றும் இலங்கை காற்பந்து சம்மேளனம் ஆகியவற்றை   கோப் குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனங்களை அடுத்த வாரம் கோப் குழுவில் முன்னிலையாகுமாறு, கோப் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனங்கள் தொடர்பில், கணக்காய்வாளர் நாயகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம், இந் நிறுவனங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள்  குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற   கொடுக்கல் வாங்கல்கள்   தொடர்பில், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்கனவே ஒரு தடவை கோப் குழுவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது