பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூலை, 2016

ஐ.தே.கட்சியில் இணையும் சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து
கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர மற்றும் பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால கம்லத் ஆகியோரே ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த செய்தி குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
இதற்கு முன்னரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது