பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2016

கூட்டமைப்பின் எம்.பிக்களுடன் கெரி ஆனந்த சங்கரி சந்திப்பு Posted By Thiru

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரியின் புதல்வருமான கெரி
ஆனந்த சங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி, வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் உள்ளிட் பலரும் கலந்துகொண்டனர்.
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கெரி ஆனந்த சங்கரி கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்ததோடு, இந்த விஜயத்தின் முதல் சந்திப்பாக அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், ஸ்ரீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.