பக்கங்கள்

பக்கங்கள்

25 ஆக., 2016

இத்தாலி நிலநடுக்கம்: பலியானோரின் எண்ணிக்கை 242

இத்தாலியில், நேற்று அதிகாலை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கிப் பலியானோரின் எண்ணிக்கை 242-ஆக
அதிகரித்துள்ளது. மேலும், பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஏறக்குறைய 370க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இத்தாலியில் நேற்று நிகழ்ந்த நிலநடுக்கத்தில் அக்குமோலி மற்றும் அமாட்ரைஸ் உள்ளிட்ட நகரங்களில் நிலநடுக்கத்தால் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.2-ஆகப் பதிவாகிய நிலநடுக்கத்தால், அமாட்ரைசில் பெரும்பாலான பகுதிகள் தரை மட்டமாகிவிட்டன. காயமடைந்தவர்களில் பல பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது.