பக்கங்கள்

பக்கங்கள்

31 ஆக., 2016

30 ஆண்டுகளின் பின் ஆனையிறவில் உப்பு அறுவடை

கடந்த 1937ம்ஆண்டு காலத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஆனையிறவு உப்பளமானது கடந்த 1990ம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தத்தினால்
சேதமடைந்த நிலையில் மீளவும் 2004ம் ஆண்டு மீள ஆரம்பிக்கப்பட்டு கடந்த 2008ம்ஆண்டு தொடர்யுத்தம் காரணமாக முற்றாக செயலிழந்த நிலையில் மீண்டும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு முப்பது ஆண்டுகளின் பின்னர் இன்று ஆனையிறவு உப்பளத்தில் உப்பு அறுவடை செய்யப்பட்டுள்ளது.
இதன் கட்டுமானப்பணிகள் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நூறு மில்லியன் ரூபா செலவில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது மேலும் இருபத்தி ஐந்து மில்லியன் ரூபா செலவில் கட்டடங்கள் களஞ்சியம் என்பன புனரமைப்பு செய்யப்பட்டன.
கடந்த காலங்களில் சுமார் ஐம்பதாயிரம் மெற்றிக்தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டதாகவும் தற்போது மேற்கொள்ளப்பட்டு உள்ள அறுவடையில் முதற்கட்டமாக எண்ணாயிரம் மெற்றிக்தொன் உப்பினை உற்பத்தி செய்யமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உப்பளத்தில் முன்பு 650 பணியாளர்கள் பணியாற்றி இருந்த போதும் இப்பொழுது 31 பணியாளர்களே வேலை செய்வதனை அவதானிக்க முடிகிறது.
_MG_0044
_MG_0046