பக்கங்கள்

பக்கங்கள்

17 ஆக., 2016

கடந்த ஏழு மாதங்களில் வீதி விபத்துகளினால் 632 பேர் பலி

கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஆயிரத்து 632 பேர் பலியாகியுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இதில் 646 பேர் உந்துருளி விபத்துக்களினால் பலியானவர்கள்என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இதுதவிர, வாகன விபத்து காரணமாக நடைபாதையில் பயணித்த 459 பேரும் பலியாகினர்.

வாகன விபத்துக்களால் 246 பயணிகளும், 137 சாரதிகளும் பலியாகியுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

வீதியில் பயணிக்கும் போது, சாரதிகள் மாத்திரமின்றி அனைவரும் அவதானத்துடன் செயற்படும் பட்சத்தில் பெரும்பhலான விபத்துக்களை தவிர்த்துf; கொள்ள முடியும் என பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.