பக்கங்கள்

பக்கங்கள்

22 ஆக., 2016

செவாலியர் விருதை பெருமிதத்துடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்: நடிகர் கமல்


நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சகம் இந்த விருதை அறிவித்துள்ளது.


பிரான்ஸ் அரசு அறிவித்த செவாலியர் விருதை பெருமிதத்துடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன் என்று கமல் கூறியுள்ளார். மேலும், இனி நான் செய்ய வேண்டியது கலை இலக்கிய பணிக்கான ஊக்கியாக விருதினை உணர்கிறேன். நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் சத்ய ஜித்ரேவை என் கரம் கூப்பி வணங்குகிறேன்.