பக்கங்கள்

பக்கங்கள்

30 ஆக., 2016

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணி

ர்வதேச காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் கவ
னயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்திற்கும் மனித உரிமைகளுக்குமான கற்கை நிறுவனம், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைத் தேடும் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவனயீர்ப்பு பேரணி, யாழ் மாவட்ட செயலத்திற்கு முன்பாக இன்று காலை ஆரம்பமானது.
பேரணி ஆரம்பிக்கப்பட்ட போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் கையெழுத்து பெறப்பட்டதுடன், காணாமல் ஆக்கபட்ட உறவினர் ஒருவரினால் தீபம் ஏற்றப்பட்டு அவர் அந்த தீபத்தை ஏந்தியவாறு பேரணியாகச் சென்றார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பமான இந்த பேரணி யாழ்ப்பாணம் நல்லூர் வீதியல் அமைந்துள்ள ஐ.நா அலுவலகம் வரையில் ஊர்வலமாகச் சென்றது.
சர்வதேச நீதி பொறிமுறைகளை உருவாக்குவதற்கு இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேரணி நடத்தப்பட்டுள்ளது.
இந்த பேரணியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மதத் தலைவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.